நடிகர் பரத்துக்கும், துபாயில் பல் டாக்டராக இருக்கும் ஜெஸ்லிக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்திற்கு 2 பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, பரத்-ஜெஸ்லி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பரத் இந்து பிராமண வகுப்பை சேர்ந்தவர். ஜெஸ்லி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் கலப்பு திருமணம் கடந்த 9-ந் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இருவரும் திருமணத்தை பதிவு செய்து கொண்டார்கள்.

பரத்-ஜெஸ்லி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள லீனா பேலஸ் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. மணமக்களை ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், துணை தலைவர் டி.ஜி.தியாகராஜன், பிலிம் சேம்பர் பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன்.
நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், அர்ஜூன், பார்த்திபன், ராஜ்கிரண், பாண்டியராஜன், மோகன், எஸ்.வி.சேகர், எ.ஜே.சூர்யா, விமல், விக்ரம் பிரபு, அருண் விஜய், ஸ்ரீமன், செந்தில், விவேக், ரமேஷ் கண்ணா, உதயா.
நடிகைகள் குஷ்பு, சரண்யா பொன்வண்ணன், தேவயானி, டான்ஸ் மாஸ்டர் கலா, டைரக்டர்கள் கே.பாலச்சந்தர், மணிரத்தினம், சங்கர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், அமீர், ஹரி, சுந்தர் சி, ஜெயம் ராஜா, வெற்றி மாறன், ஆர்.வி.உதயகுமார், கண்ணன், பேரரசு. பட அதிபர்கள் ஏ.வி.எம்.சரவணன், ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன், கே.முரளிதரன், சாமிநாதன், பி.எல்.தேனப்பன், எச்.முரளி, எடிட்டர் மோகன், எஸ்.தாணு, ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.




 
 
 
 
 
 
 
 
 
 
 
 






 
 Posts
Posts
 
 


No comments:
Post a Comment