சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம். அவரது நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் வசூலைக் குவித்து வருவதால் வந்த மகிழ்ச்சியாம் இது.
படம் வெளியான முதல் வாரத்தின் வார இறுதியிலேயே இப்படம் ரூ. 11.85 கோடியை வசூல் செய்துள்ளதாம். இதனால் வாயெல்லாம் பல்லாக காணப்படுகிறது வருத்தப்படாத வாலிபர் சங்க படக்குழு.
மேலும் தொடர்ந்து 3 ஹிட் படங்களைக் கொடுத்தும் புதிய பெருமையைத் தேடிக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா
கேடி பில்லா கில்லாடி ரங்கா, அடுத்து எதிர்நீச்சல் என இரு ஹிட் படங்களைக் கொடுத்தவர் சிவகார்த்திகேயன்.

ரூ.15 கோடி வசூல்
கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படம் 5 கோடி செலவில் தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் ரூ. 15 கோடிக்கு அது வசூல் ஈட்டியதாம். இது தனுஷ் தயாரித்த படமாகும்.

மிகப்பெரிய ஹிட்
இந்த வரிசையில் தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கமும் இணைந்துள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வசூல், சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப் பெரிய ஹிட் படம் என்று வர்த்தக ஆய்வாளர் திரிநாத் கூறுகிறார்.
ஹிட் வசூல்
சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே நல்ல ஓப்பனிங் கொடுத்த படம் இதுதான். முதல்வார இறுதியில் ரூ. 11.85 கோடியை இது வசூலித்துள்ளது என்றார் அவர்.

மக்களின் நடிகர்
திரிநாத் கூறுகையில், சிவகார்த்திகேயன் இதுவரை 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் அதற்குள் மக்களின் நடிகராக அவர் உயர்ந்துள்ளார். காமெடியை மையமாக வைத்து அவர் நடிப்பது அனைவரையும் ஈர்த்துள்ளது. திரைத்துறையினரால் விரும்பப்படும் நடிகராகவும் அவர் உயர்ந்துள்ளார் என்றார்.

ஹன்சிகா உடன் ஜோடி
தற்போது மான் கராததே என்ற காமெடி கலந்த பேன்டசி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

No comments:
Post a Comment